குமரி: குமரி மாவட்ட அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் திருமாவேந்தன் தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே அம்பேத்கர் சிலை முன் திரண்டு உண்ணாவிரத போராட்டம் நடத்த முயன்றனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். உடனே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். 10 பெண்கள் உள்பட மொத்தம் 33 பேர் கைது செய்யப்பட்டனர்.