இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் வீலிங் செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்கள் குறித்து, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் பஜார் காவல்நிலைய சரகம் அச்சுந்தன்வயல் புறவழிச்சாலை பகுதியில் பைக் வீலிங் செய்து சாகசத்தில் ஈடுபட்ட கார்த்திகேயன் என்பவர் மீது பஜார் காவல்நிலையத்தில் சட்டப்பிரிவுகள் 279,336 IPC and 184,188 MV Act-ன் பிரகாரம் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் பைக் வீலிங் செய்ய பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் இது போன்று சாலைகளில் சாகசம் செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கப்படுகிறது.