திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N. சிலம்பரசன். அவர்கள், உத்தரவின்படி மாவட்ட காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து சாதி அடையாளங்களை அழிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி தாழையூத்து காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கட்டுடையார்குடியிருப்பு பகுதியில் 24 மின்கம்பங்களிலும்,களக்காடு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட சிதம்பராபுரம், புதுதெரு பகுதிகளில் 20 மின்கம்பங்கள், 1 தண்ணீர் தேக்க தொட்டி, 3 சுவர்களிலும், திருக்குறுங்குடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட தெற்குமாவடி, கட்டளை புதுதெரு பகுதிகளில் 10 மின்கம்பங்கள், 1 சுவரிலும் இன்று ஒரே நாளில் 59 இடங்களில் ஊர்த்தலைவர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் அந்தந்த பகுதி மக்கள் தாமாகவே முன்வந்து சாதிய அடையாளங்களை வண்ணம் பூசி அழித்தனர்.