திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர மதுவிலக்கு காவல்துறையினர்
பாளையங்கோட்டை வண்ணார்பேட்டை சாலை தெரு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சின்னதுரை(32). வி.கே.புரம் கணபதி(45) ஆகியோர் மது விற்றது தெரிய வந்தது. அவர்களை கைது செய்து 14 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதே போல, திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் மது விற்ற கரையிருப்பு பகுதியைச் சேர்ந்த ஆறுமுக நயினார்(59). தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது சையதுல்லா(32). உடன்குடி பகுதியைச் சோ்ந்த சிவா(44). ஆகியோரை கைது செய்து 75 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், மாநகர பகுதிகளில் மது விற்பனையில் ஈடுபட்ட பாளையங்கோட்டையை சேர்ந்த ராமகிருஷ்ணன்(28). ஸ்ரீவைகுண்டம் மாரியப்பன்(35). பேட்டையைச் சேர்ந்த துரை(51). ஆகியோரை கைது செய்து 102 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















