திருநெல்வேலி: திருநெல்வேலி நகரம் தெற்கு பிரதான சாலை பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் ரோகினி செல்வி தலைமையிலான காவல்துறையினர் (27.01.2026) அன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த பேட்டை கோடீஸ்வரன் நகரைச் சேர்ந்த ராஜ் (46). என்பவரை சந்தேகத்தின் பேரில் மறித்து, அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். சுமார் 66 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை அவர் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்ததையடுத்து
ராஜை கைது செய்தனர்.
மேலும் மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் முகமது இஸ்மாயில் தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியின் போது குறிச்சி புறவழிச்சாலை அருகே அதே பகுதியைச் சேர்ந்த சொரிமுத்து மகன் தவசி (40). என்பவர் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்த காவல்துறையினர், 35 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















