கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குவாரிகள் சட்டவிரோதமாக இயங்குகின்றன என்ற தகவலின் அடிப்படையில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக இன்று தோட்டியோடு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், இரண்டு கல்குவாரிகள் சட்டவிரோதமாக செயல்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த இரண்டு கல்குவாரிகளையும் உடனடியாக மூட உத்தரவிடப்பட்டது. மேலும், இத்தகைய மீறல்கள் தொடர்பாக முறையான கண்காணிப்பு மேற்கொள்ளாத சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகளை முழுமையாக கட்டுப்படுத்த இந்த நடவடிக்கைகள் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கையை சமூக ஆர்வலர்கள் மற்றும் இயற்கை பாதுகாவலர்கள் வரவேற்றுள்ளனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















