தூத்துக்குடி: 2019ஆம் ஆண்டு புளியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓட்டுடன்பட்டி பேருந்து நிறுத்தத்தில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில், பிரேம்சங்கர் (29). மற்றும் பிரபு (38). ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு ஓட்டப்பிடாரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், நீதிபதி இருவரையும் குற்றவாளிகள் என நிரூபித்து தலா 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த காவல்துறையினரும், அரசு தரப்பு வழக்கறிஞரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் அவர்களால் பாராட்டப்பட்டனர்.




















