நீலகிரி : நீலகிரி மாவட்ட கோத்தகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாதா கோவில் ஜங்சன் அருகில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் படி கோத்தகிரி காவல் நிலைய காவலர்கள் சோதனை செய்து கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேரை கைது செய்து, அவர்களிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 400 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.