நீலகிரி : நீலகிரி மாவட்டம், கோத்திகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கைதளா பகுதியின் அருகில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கோத்தகிரி மற்றும் சோலூர் காவல் நிலைய காவலர்கள் சோதனை செய்து கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.