திருநெல்வேலி : கடந்த 2012-ம் ஆண்டு மலையடிபுதூர், பருத்திவிளைத்தெருவை சேர்ந்த முத்துராஜ் (37) என்பவர் மேல மாவடியை சேர்ந்த சதீஷ் (32)என்பவரின் உறவினர் பெண்ணை காதலித்துவந்து பிடிக்காததால் சதீஷ் மற்றும் ஐந்து பேர் சேர்ந்து முத்துராஜை ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளனர். இதுகுறித்து திருக்குறுங்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை மதுரை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், (20.12.2022) வழக்கை விசாரித்த நீதிபதிகள் திரு. ஜெயச்சந்திரன் மற்றும் திரு. சுந்தரமோகன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் சதீஷ்க்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 1 ஆயிரம் அபராதம் விதித்தும் மற்றவர்களை விடுதலைச்செய்து தீர்ப்பளித்தனர்.