திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகேயுள்ள வல்லத்து நம்பிகுளத்தைச் சேர்ந்தவர் முருகன் (38). இவர், குடும்ப பிரச்னையில் கடந்த 2017ஆம் ஆண்டு கொலை செயப்பட்டார். இது தொடர்பாக அவரது மனைவி ஞான அகிலா(34). அதே பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் (30). பஞ்சுராஜன்(33). ஆகிய மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, விசாரித்த நீதிமன்றம் மேற்கூறிய மூவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.10,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தார்.
இதில் ஞான அகிலாவுக்கு மற்றொரு பிரிவில் கூடுதலாக 10 ஆண்டுகள் சிறையும், ரூ.15,000 அபராதமும் விதித்து தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தது. இவ்வழக்கில், திறம்பட செயல்பட்ட சேரன்மகாதேவி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ் காவல் ஆய்வாளர், கவிதா, காவல் ஆய்வாளர், மங்கையர்கரசி (தற்போது சேரன்மகாதேவி AWPS), காவலர் விக்னேஷ் ஆதிமூலம் மற்றும் காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.வி.பிரசண்ண குமார். இ.கா.ப., வெகுவாக பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















