மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையில் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வழக்குகளுக்கு தண்டனை பெற்றுத்தரும் விதமாக நீதிமன்ற விசாரணை கண்காணிப்பு குழு (Trial Monitoring Committee) அமைக்கப்பட்டு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர் படி நிலைகளில் நீதிமன்ற விசாரணை கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் பொறுப்பில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய வழக்குகளின் நீதிமன்ற விசாரணைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் உட்கோட்டம், சிலைமான் காவல் យល់ 5 2021 537/2021, U/s 147, 148, 302 IPC r/w 3 (2) (V) SC/ST Act கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட சிலைமான் காவல் நிலைய சரித்திர பதிவேட்டு குற்றவாளிகளான சிலைமான் நெடுங்குளத்தைத் சேர்ந்த 1) மணிகண்டன், வயது (31). த/பெ பாண்டியராஜன், 2) அஜித் வயது (28). த/பெ முருகன், 3) பிரபுக்குமார், வயது (31). த/பெ ராமன், 4) கார்த்திகேயன் வயது (32). த/பெ கணேசன், 5) சங்கேஸ்குமார் வயது (31). த/பெ ராமர் மற்றும் 6) சந்தனக்கருப்பு வயது (28). என்பவர்களுக்கு எதிராக மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் மற்றும் சமூக நீதி மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேற்கண்ட குற்றவாளிகள் தொடர் குற்றசெயல்களில் ஈடுபட்டதன் காரணமாக சரித்திர பதிவேடுகள் ஆரம்பித்து கண்காணிக்கப்பட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் மற்றும் சமூக நீதி மற்றும் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி திருமதி.N.நாகலட்சுமி அவர்கள் மேற்படி கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றத்திற்காக மேற்கண்ட குற்றவாளிகளில் முதல் மூன்று குற்றவாளிகளுக்கு ஒவ்வொருவருக்கும் ஆயுள் தண்டனையும் அதில் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூபாய் 5,000/- அபராதமும் விதித்து, வழக்கின் இதர குற்றவாளிகளை விடுதலை செய்து தீர்ப்பு அளித்துள்ளார்.
அதன்பேரில் மேற்படி நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து கண்காணித்து வழக்கின் சாட்சியங்கள் அனைவரையும் முறையாக நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனை பெற்றுத்தர சிறப்பாக வாதாடிய சிறப்பு அரசு வழக்கறிஞர் திரு.P.அழகர், நீதிமன்றத்தில் துரிதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.ஜெகதீஸ்குமார், நீதிமன்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் திருமதி.பாண்டிச்செல்வி மற்றும் நீதிமன்ற தலைமை காவலர் திரு.பாஸ்கரன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டி உள்ளார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்
திரு.விஜயராஜ்