மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையில் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வழக்குகளுக்கு தண்டனை பெற்றுத்தரும் விதமாக நீதிமன்ற விசாரணை கண்காணிப்பு குழு (Trial Monitoring Committee) அமைக்கப்பட்டு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர் படி நிலைகளில் நீதிமன்ற விசாரணை கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் பொறுப்பில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய வழக்குகளின் நீதிமன்ற விசாரணைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் உட்கோட்டம், சிலைமான் காவல் យល់ 5 2016 529/16, U/s 147, 148, 341, 506(ii), 302 IPC கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட சிலைமான் காவல் நிலைய சரித்திர பதிவேட்டு குற்றவாளிகளான 1) மணிமாறன் (31). த/பெ ராசு, பசும்பொன் நகர், கல்மேடு, 2) ஆசாரி மணிகண்டன் (35). த/பெ அங்குசாமி, ஆசாரி காலனி, கல்மேடு, 3) மணிகண்டன் என்கிற புல்லட் மணி (36). த/பெ ராமச்சந்திரன், பசும்பொன் நகர், கல்மேடு, 4) சரவணன் (45). த/பெ ராசு, பசும்பொன் நகர், கல்மேடு, 5) அஜித்குமார் (33). த/பெ பாண்டி, காளியம்மன் கோவில் தெரு, புளியங்குளம் என்பவர்களுக்கு எதிராக மதுரை மாவட்ட மஹிளா அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேற்கண்ட குற்றவாளிகள் தொடர் குற்றசெயல்களில் ஈடுபட்டதன் காரணமாக சரித்திர பதிவேடுகள் ஆரம்பித்து கண்காணிக்கப்பட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட மஹிளா அமர்வு நீதிமன்ற நீதிபதி அவர்கள் மேற்படி கொலை வழக்கில் ஈடுபட்ட குற்றத்திற்காக மேற்கண்ட குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் ஆயுள் தண்டனையும் மற்றும் ரூபாய் 10,000/- அபராதமும் மற்றும் சட்டவிரோதமாக கூடியதற்காக குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் மேலும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் ரூபாய். 1000/- மும் விதித்து தீர்ப்பு அளித்துள்ளார்.அத ன்பேரில் மேற்படி நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து கண்காணித்து வழக்கின் சாட்சியங்கள் அனைவரையும் முறையாக நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனை பெற்றுத்தருவதற்கு உதவியாக நீதிமன்றத்தில் துரிதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த காவல் ஆய்வாளர் திரு. புகழேந்தி மற்றும் நீதிமன்ற தலைமை காவலர் திரு.பாஸ்கரன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டி உள்ளார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்
திரு.விஜயராஜ்