அரியலூர் : அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், குலமாணிக்கம் அந்தோனியார் கோவில் தெருவைச் சேர்ந்தவர், கணேசன் மகன் பாஸ்கர் (எ) சைக்கோ பாஸ்கர், வயது (39) இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்த இவர் (09.09.2023)-ந் தேதி ஒரு கொலை வழக்கில் ஈடுபட்டு (11.09.2023) ந் தேதி திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இவர் வெளியே வந்தால் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கக்கூடும் என்பதால் குற்றவாளியின் மீது குண்டர் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கக்கோரி திருமானூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.சு.பெரியசாமி அவர்களின், பரிந்துரையின் அடிப்படையில், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ்கான் அப்துல்லா அவர்களின், மேல் பரிந்துரையை ஏற்று, அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, இ.ஆ.ப., அவர்கள், குற்றவாளி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் படி தடுப்புக்காவலில் அடைக்க ஆணையிட்டுள்ளார். அதன் படி (14.10.2023) அதற்கான ஆணைப் பிரதிகள் திருச்சி மத்திய சிறையில் வழங்கப்பட்டன.