அரியலூர் : அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், கண்டிராதீர்த்தம், நடுத்தெருவைச் சேர்ந்தவர் முருகன் மகன் அர்ஜுன்ராஜ், வயது(23). இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்த இவர், (09.9.2023)-ந்தேதி ஒரு கொலை வழக்கில் ஈடுபட்டு, திருமானூர் காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவர் வெளியே வந்தால் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க கூடும் என்பதால் குற்றவாளி அர்ஜுன்ராஜ் மீது குண்டர் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கக்கோரி திருமானூர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் திரு.சு.பெரியசாமி பரிந்துரையின் அடிப்படையில், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ்கான் அப்துல்லா அவர்களின், மேல் பரிந்துரையை ஏற்று, அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா, இ.ஆ.ப., அவர்கள் குற்றவாளி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்படி தடுப்புக்காவலில் அடைக்க ஆணையிட்டுள்ளார். அதன்படி இன்று (09.10.2023) அதற்கான ஆணைப் பிரதிகள் திருச்சி மத்திய சிறையில் வழங்கப்பட்டன.