திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பிரம்மதேசம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால் (56). இவரை, முன்விரோதத்தால் அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் (45). என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு அரிவாளால் வெட்டிக் கொலை செய்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட 4-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது .
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் கணேசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.9,500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இவ்வழக்கில், திறம்பட செயல்பட்ட அம்பாசமுத்திரம் துணை காவல் கண்காணிப்பாளர், கணேஷ்குமார், காவல் ஆய்வாளர்கள், சண்முகவேல், ராஜகுமாரி (தற்போது தென்காசி மாவட்டம்) பெண் தலைமை காவலர், செல்வி உள்ளிட்ட காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மரு. வி.பிரசன்ன குமார், இ.கா.ப., பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















