திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் அருகே, கடந்த 2023 ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக மடத்துபட்டியை பகுதியை சேர்ந்த ரமேஷ் (26). என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (29). என்பவர் அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயன்றது தொடர்பாக, வழக்கு பதிவு செய்யப்பட்டு, வழக்கின் விசாரணை திருநெல்வேலி முதன்மை சார்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளியான அருண்குமார் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் நீதிமன்றம் (03.02.2026) அன்று 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.500/- அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
இவ்வழக்கில், சாட்சிகளை நீதிமன்றத்தில் விரைவாக ஆஜர்படுத்தி, தண்டனை பெற்றுக் கொடுத்த திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ரகுபதி ராஜா, தேவர்குளம் காவல் ஆய்வாளர், மாரிச்செல்வி, காவல் ஆய்வாளர், சபாபதி (தற்போது தூத்துக்குடி மாவட்டம்), பெண் தலைமை காவலர், மீனா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. V.பிரசண்ண குமார், இ.கா.ப., வெகுவாக பாராட்டினார். திருநெல்வேலி மாவட்ட காவல் துறையானது, நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்ப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரும் முனைப்பில் தொடர்ந்து, உரிய சட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















