திருநெல்வேலி : திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குள் நிகழ்ந்த கொலை முயற்சி தொடர்பான வழக்கில் திருநெல்வேலி நகரம் பிட்டாபுரத்தி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மகேந்திரன் மகன் பாஞ்சாலராஜன் (33). என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். அவர், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகக் கூறி, குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அவரை சிறையிலடைக்க திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர், மதன், இ.கா.ப., (மேற்கு) பரிந்துரைப்படி, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் முனைவர் நெ. மணிவண்ணன், இ.கா.ப, உத்தரவுப்படி பாளையங்கோட்டை மத்திய சிறையில் பாஞ்சாலராஜன் (27.01.2026) அன்று அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















