திருநெல்வேலி: திருநெல்வேலி கங்கைகொண்டான் அருகே கடந்த 2020 ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக புங்கனூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை (55). என்பவர் அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயற்சித்த வழக்கு கங்கைகொண்டான் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டு, வழக்கின் விசாரணையானது, திருநெல்வேலி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், செல்லத்துரை மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் (30.03.2026) அன்று குற்றவாளிக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5,000/- அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இவ்வழக்கில், திறம்பட சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த திருநெல்வேலி ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர், ரகுபதி ராஜா, காவல் ஆய்வாளர்கள், வேல்கனி, (கங்கை கொண்டான்) ஷோபா ஜென்சி (தற்போது தூத்துக்குடி மாவட்டம்), தலைமைப் பெண் காவலர் கன்னி மரியாள் மற்றும் காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மரு. வீ. பிரசன்னா குமார், இ.கா.ப., வெகுவாக பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்



















