மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையில் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வழக்குகளுக்கு தண்டனை பெற்றுத்தரும் விதமாக நீதிமன்ற விசாரணை கண்காணிப்பு குழு (Trial Monitoring Committee) அமைக்கப்பட்டு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர் படி நிலைகளில் நீதிமன்ற விசாரணை கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் பொறுப்பில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய வழக்குகளின் நீதிமன்ற விசாரணைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் உட்கோட்டம், மேலவளவு காவல் நிலையத்தில் கடந்த 2021 ம் வருடம் தாக்கலான கொலை முயற்சி வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளியான சின்னக் கருப்பன் (50). கிடாரிப்பட்டி மேலூர் என்பவருக்கு எதிராக மதுரை மாவட்டம், PCR நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மேற்படி கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட குற்றத்திற்காக மேற்கண்ட குற்றவாளிக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 3,000/-அபராதமும் விதித்து, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்பேரில் மேற்படி நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து கண்காணித்து வழக்கின் சாட்சியங்கள் அனைவரையும் முறையாக நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் துரிதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ரகுபதி ராஜா மற்றும் நீதிமன்ற தலைமை காவலர் திருமதி. ஜான்சி மேரி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டி உள்ளார்.
















