திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்ட முக்கூடல், தியாகராஜர் தெருவை சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகன் முத்துவிஜயராஜ் (35), என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேற்படி நபர் தொடர்ந்து பிரச்சினைகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக சேரன் மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. ஜென்சி, அவர்கள் கவனத்திற்கு வந்ததால், மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டம் பிரிவு 14 கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப.,அவர்கள் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.