தூத்துக்குடி: தூத்துக்குடிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. உதயசூரியன் அவர்கள் மேற்பார்வையில் கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர் திரு. சுஜித் ஆனந்த்
தலைமையிலான போலீசார் நேற்று (08.08.2021) ரோந்து பணியில் ஈடுபட்ட போது கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி மாரியம்மன் கோவில் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த கோவில்பட்டி மார்க்கெட் ரோடு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ராஜதுரை 27)என்பவரை பிடித்து விசாரணை செய்ததில்,
அவர் அப்பகுதியில் நடந்து சென்ற ஒருவரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் அவரை கைது செய்து, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட ராஜதுரை என்பவர் மீது கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உட்பட 7 வழக்குகளிலும், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உட்பட 11 வழக்குகளிலும், திருநெல்வேலி மாவட்டம் கே.வி நல்லூர் காவல்நிலையத்தில் ஒரு வழக்கு என மொத்தம் 19 வழக்குகளில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.