தூத்துக்குடி: காடல்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான கோவில் குமரெட்டியாபுரத்தில், அதே பகுதியைச் சேர்ந்த (வாதி) பம்பையன் மகன் மாரிமுத்து (46) என்பவருக்கும், அவரது உறவினரான சிந்தன் மகன் சின்ன அழகுமலை (45) என்பவருக்கும் பொதுப்பாதை பயன்படுத்துவது சம்மந்தமாக பிரச்சனை ஏற்பட்டு, அது முன் பகை இருந்து வந்துள்ளது.
மேற்படி முன் விரோதம் காரணமாக நேற்று இரவு குற்றவாளி சின்ன அழகுமலை வாதி மாரிமுத்துவை கம்பால் முதுகில் அடித்து காயம் ஏற்படுத்தி, பின் வீட்டில் இருந்து அரிவாளை எடுத்து வந்து இத்தோடு செத்து தொலை என்று தலையில் வெட்டியுள்ளார், அதற்குள் அருகிலிருந்தவர்கள் தடுத்து மாரிமுத்துவை காப்பாற்றியுள்ளனர். இதில் மாரிமுத்துவுக்கு முன் தலையில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.
இதுகுறித்து காயம்பட்ட மாரிமுத்து என்பவர் அளித்த புகாரின்பேரில் காடல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இதனையடுத்து காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் சம்பந்தப்பட்ட குற்றவாளி உடனே கைது செய்யுமாறு விளாத்திக்கும் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ்-க்கு உத்தரவிட்டார். உத்தரவின் பேரில் விளாத்திகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் காடல்குடி காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் திரு. கலா தலைமையில் உதவி ஆய்வாளர் திரு.செல்லத்துரை மற்றும் போலீசார் இன்று சின்ன அழகுமலையை கைது செய்து சிறையிலடைத்தன