திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மேலச்செவல் பகுதியில் கடந்த 15.01.2023-ம் தேதி அன்று கிருஷ்ணன் என்ற கிட்டுசாமியை அரிவாளால் வெட்டி கொலை செய்த வழக்கில் மேலச்செவலை சேர்ந்த கொம்பையா 19, பாலசந்துரு 23. பற்பநாதன் 19. மாரியப்பன் 19. ஐயப்பன் 23. மற்றும் தேசமாணிக்கம், பிள்ளையார் கோவிலை சேர்ந்த செல்லக்குட்டி என்ற துரை 23. ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேற்படி நபர்கள் கொலை மற்றும் கொலைமுயற்சி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர் திரு. தில்லைநாகராஜன்,அவர்கள் கவனத்திற்கு வந்ததால், மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டம் பிரிவு 14 கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன் இ.கா.ப., அவர்கள் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.