தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. உதயசூரியன் அவர்கள் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. சபாபதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது.
கோவில்பட்டி பாரதிநகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த கோவில்பட்டி பாரதி நகரைச் சேர்ந்த முருகன் மகன் சூர்யா (21) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் அந்த பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து தகராறு செய்து கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் சூர்யா என்பவரை கைது செய்தனர்.
இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட சூர்யா என்பவர் மீது கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட 3 வழக்குகளும், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி உட்பட 5 வழக்குகளும், கழுகுமலை காவல் நிலையத்தில் 2 வழிப்பறி வழக்குகளும், திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும் என மொத்தம் 11 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.