தென்காசி: தென்காசி மாவட்டம், செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விஸ்வநாதபுரத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு மூதாட்டி ஒருவரை கொலை செய்த வழக்கில் செங்கோட்டையை சேர்ந்த 1.அப்துல் சலாம், 2.அப்துல் ஜாபர் (56). 3.காதர் மிர்ஷா (52). 4.அமினா (40). 5.பாத்திமா பீவி (48). ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ் வழக்கின் விசாரணை தென்காசி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஐந்து பேரும் குற்றவாளிகள் என நிரூபணம் ஆனதால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 2,500 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
மேற்படி வழக்கில் திறம்பட விசாரணை செய்து, சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்த செங்கோட்டை காவல்துறையினர் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்களுக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.S.மாதவன் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















