தூத்துக்குடி : கொரோனா 3ம் அலை பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்து 7ம் தேதி வரை கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு வாரமாக அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக விளாத்திகுளம் To மதுரை மெயின்ரோடு பகுதியில் உள்ள அக்கம்மாள் திருமண மஹாலில் வைத்து கொரோனா நோய் பரவல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பொதுமக்களிடம் கொரோனா பெருந்தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி, கட்டுரைபோட்டி மற்றும் கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றிபெற்ற பள்ளி குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
அப்போது மவாட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா 3ம் அலையை தடுக்கும் பொருட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கடந்த 7 நாட்களாக அரசின் வழிகாட்டுதலின்படி மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது பரவி வரும் 3ம் அலை கொரோனா பெருந்தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள வருமுன் காப்போம் என்ற நோக்கத்தில் மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் விழிப்புணர்வு காவல்துறை சார்பாக ஏற்படுத்தி வருகிறோம்.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இருந்தாலே கொரோனா பெருந்தொற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றி கொள்ளமுடியும். பள்ளிகுழந்தைகளாகிய உங்களுக்கு கல்வி ஒன்று தான் முக்கிய குறிக்கோளாக இருக்கவேண்டும்.
ஆசிரியர்களின் அறிவுரைகளை கேட்டு வருங்காலத்தில் நீங்கள் மிகப்பெரிய சாதனையாளர்களாக திகழவேண்டும். கல்வி ஒன்றே உங்களை வருங்காலத்தில் சமுதாயத்தில் நல்ல மனிதர்களாக உருவாக்கும்.
எட்டையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜின்னா பீர்முகம்மது, விளாத்திகுளம் குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் திரு.ஆல்வின் ஜோஸ், உதவி ஆய்வாளர்கள் திரு.காசிலிங்கம், திரு.சரவணன், திரு.முத்துமாரி உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.