மதுரை: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜுத்குமார்.IPS., அவர்களின் உத்தரவின்படி மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் அனைவருக்கும், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நடத்தப்பட்டது. மேலும் வணிக சங்க உறுப்பினர்கள், ஓட்டல் ஊழியர்கள், பஸ் ஆட்டோ ஓட்டுனர்கள், குடியிருப்பு நல சங்க உறுப்பினர்களிடம் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு உரிய விழிப்புணர்வு நோட்டீஸ், மாவட்ட காவல் துறை சார்பாக வழங்கப்பட்டது. கையுறை அணிதல், அடிக்கடி கிருமி நாசினி பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்த வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது .
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி