திண்டுக்கல்: திண்டுக்கல் அனுமந்தநகரை சேர்ந்த கொத்தனார் குமார் இவர் அதே பகுதியை சேர்ந்த வெங்கட்ராஜ் (36). என்பவர் வீட்டில் கொத்தனார் வேலை செய்த நிலையில் வீட்டின் வெளிப்புற பூச்சில் கீரல் விழுந்திருப்பதாகவும் அதை சரி செய்ய அழைத்ததற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயக்குமார் மாலப்பட்டி ரோடு, பசுமை நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த வெங்கட்ராஜ் அசிங்கமாகவும் ஆபாசமாகவும் பேசி கட்டையால் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து ஜெயக்குமார் அளித்த புகாரின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட வெங்கட்ராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















