திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர்கள் மரு.சி.மதன் இ.கா.ப.,(மேற்கு), திரு.V.வினோத் சாந்தாராம் (கிழக்கு) ஆகியோர் தலைமையில், காவல் துறை அதிகாரிகள், காவல் ஆளிநர்கள், அமைச்சு பணியாளர்கள் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு உறுதி மொழியை (9.2.2026) அன்று கீழ்க்கண்டவாறு எடுத்துக் கொண்டனர். “இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி மனிதனை வணிகப் பொருளாக்குதலும், வலுக்காட்டாயமாக வேலை சுமத்தும் வழங்கங்களும், கடன் பிணையத்தொகை வழங்கி கட்டாய பணிக்கு வற்புறுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமாக வரையறை செய்யப்பட்டுள்ளதால், கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழித்திடும் நோக்கத்தை கருத்திற்க் கொண்டு, சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்.
என்றும், கொத்தடிமை தொழிலாளர் முறை எந்த தொழிலில் இருந்தாலும் அதனை அடையாளம் கண்டு தக்க நடவடிக்கை எடுக்க முழு முயற்சி செய்வேன் என்றும், எந்த தொழிற்சாலைகளிலும், தொழிலாளர்களுக்கு முன் பணம் கொடுத்து பணியமர்த்துவதை தவிர்க்க வலியுறுத்துவேன் என்றும், கொத்தடிமை தொழிலாளர்களை மீட்டு அவர்களின் முழுமையான மறுவாழ்விற்காக பணியாற்றுவேன் என்றும், இந்திய அரசமைப்பு சட்டம் வகை செய்துள்ள அடிப்படை உரிமைகளை அனைவருக்கும் உரிதாக்குவதற்கு, கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டத்தை சீரிய முறையில் செயற்படுத்த உறுதுணையாக இருந்து கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு சிறப்புடன் செயல்படுவேன் என்றும் நான் உளமாற உறுதி கூறுகிறேன்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















