விருதுநகர் : விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (48), கூலித்தொழிலாளி. இவர் கடந்த (24.6.2021), அன்று 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கராஜை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தங்கராஜ் என்பவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 7 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு நஷ்ட ஈடாக ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என பரிந்துரை செய்தார்.