திருச்சி: திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் நோய்த்தொற்று காரணமாக தங்களது தாய் மற்றும் தந்தையை இழந்த 12 குழந்தைகள் குறித்த தகவல்களை காவல்துறையினர் தற்போது சேகரித்துள்ளனர்.
அந்தக் குழந்தைகள் நலன் குறித்து பேசியுள்ள ஐ.ஜி திரு.பாலகிருஷ்ணன் குழந்தைகளின் கல்வியில் வேலை வாய்ப்பில் ஒரு சிறந்த துறையைத் தேர்ந்தெடுத்து வாழ்க்கையில் முன்னேற்றுவதற்கான ஒரு வழிகாட்டியாக நாம் செயல்பட வேண்டும்.
இந்த திட்டத்தில் ஆர்வமுள்ள காவலர்கள் விருப்பம் தெரிவித்தால் அவர்களுக்கு குழந்தைகளிடம் எவ்வாறு பழக வேண்டும், அவர்களுடைய தேவையை எவ்வாறு தெரிந்து கொள்ள வேண்டும், உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும் வழங்கப்படும் என்றும், வாட்ஸ் அப் மூலம் ஒரு குழு அமைக்கப்பட்டு அந்த குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.