தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் உத்தரவின்பேரில். ஆழ்வார்திருநகரி காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஜூடி, உதவி ஆய்வாளர் . திரு. தாமஸ், ஸ்ரீவைகுண்டம் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. ஜெகநாதன், தலைமைக் காவலர்கள் ரோந்து சென்றபோது இருவர் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தனர், போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடிவிட்டனர்.
இத்தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு சம்பந்தபட்ட குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டார்.
இதுகுறித்து குரும்பூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திலிருந்த 20 லிட்டர் ஊரலை அழித்து, கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்திய கேஸ் அடுப்பு, கேஸ் சிலிண்டர் மற்றும் 2 பானைகளை பறிமுதல் செய்தனர்.