தஞ்சாவூர் : திருச்சி மண்டல காவல்துறை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் ஐ.ஜி அவர்களின் உத்தரவின் போரில் தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் டி.ஐ.ஜி அவர்களின் மேற்பார்வையில், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளி ப்ரியா கந்தபூநேநி இ.கா.ப அவர்களின் வழி காட்டுதலின் போரில் கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் குடும்ப விழா கொண்டாட்டம் இன்று 13.08.2021 கும்பகோணம் மகளிர் காவல் நிலையத்தில் நடைபெற்றது .
இக்குடும்ப விழா கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. உமாமகேஸ்வரி , நிலைய உதவி ஆய்வாளர் திருமதி .சுபாஷினி
மற்றும் பெண்கள் உதவிக்காக நியமிக்கப்பட்டிருக்கும் பெண் காவலர்கள் , சமூக நல விரிவாக்க அலுவலர் திருமதி . குணா, ஊர் நல அலுவலர் திருமதி. சத்தியபாமா மற்றும் Heal Trust அலுவலர் மெர்சி ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள் .
இந்நிகழ்ச்சியில் கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குடும்ப தகராறு சம்மந்தமாக தரப்பட்ட புகார்களின் அடிப்படையில் விசாரணை செய்து அதன் பின்பு சேர்த்து வைக்கப்பட்ட குடும்பங்களை அழைத்து அவர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டவர்களிடம் பெண்களுக்கும் மற்றும் குழந்தைளுக்கும் வீட்டிலும் , வெளி பகுதிகளிலும் ஏற்படும் ஆபத்து காலத்தில் தன் நிலை உணர்ந்து தன்னை காப்பாற்றி கொள்ள அவசர அழைப்புக்கு தேவையான தொலைபேசி எண் – 181 – என்றும் , அதனின் சிறப்பை பற்றிய விழிப்புணர்வு தகவல்களும் வழங்கப்பட்டது .