குமரி: குமரி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு. ஹரிகிரண் பிரசாத், சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் வருகை பதிவேடு ஆகியவற்றை பார்வையிட்டார். மேலும் முதல் தகவல் அறிக்கை, புகார் மனு அளிக்க வந்தவர்களின் விவரங்கள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். நிலுவையில் உள்ள வழக்குகளை உடனுக்குடன் விரைந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்களிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும். புகார் மனு மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றார்.