திருநெல்வேலி: திருநெல்வேலி தச்சநல்லூர் காவல் நிலைய சுற்று சுவர் மீது கடந்த (12.10.2025) அன்று பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து பொது ஒழுங்கு மற்றும் பொது சொத்து பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் சரண்(20). மற்றும் வல்லவன்கோட்டையைச் சேர்ந்த ஸ்ரீதர் மகன் அருண்குமார்(25). இருவர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர் மரு.V.பிரசண்ணகுமார்.இ.கா.ப. (மேற்கு). காவல் உதவி ஆணையர் A.சரவணன் (சந்திப்பு சரகம்). காவல் ஆய்வாளர் க.தில்லை நாகராஜன் (தச்சநல்லூர் சட்டம் ஒழுங்கு) ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி. இ.கா.ப., ஆணைப்படி (12.11.2025) அன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















