திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர பகுதியில் திருட்டு மற்றும் நகை பறித்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த திருநெல்வேலி டவுன் வயல் தெருவை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் ஐயப்பன்(19). என்பவர் மீது மாநகர காவல் துணை ஆணையர், V.கீதா, (மேற்கு) காவல் உதவி ஆணையர், செந்தில்குமார், டவுன் காவல் ஆய்வாளர், பிலோமினா(குற்றப்பிரிவு) ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., ஆணைப்படி (10.09.2024)-ஆம் தேதி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்