திருநெல்வேலி: திருநெல்வேலி, முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட முன்னீர்பள்ளம், ஜே.ஜே.நகரை சேர்ந்த செல்லப்பா என்பவரின் மகன் செல்வசங்கர் (24). என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேற்படி நபர் கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக முன்னீர்பள்ளம் காவல் ஆய்வாளர், சுரேஷ் கவனத்திற்கு வந்ததால், மேற்படி நபரை குண்டர் தடுப்பு சட்டம் பிரிவு 14 யின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்ததின் பேரில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், செல்வ சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் (05.10.2024) அடைத்தனர். மேலும் இது போல் தாழையூத்து காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட ராஜவல்லி புரத்தில், ஒருவரும் கூடங்குளம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கூத்தங்குழியில் நான்கு பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்