திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியில் கொள்ளை மற்றும் மிரட்டல் போன்ற வழக்குகளில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முத்து ரமேஷ் (36). சரவணன் (35). பார்வதிமுத்து (26). ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இவர்கள் திருட்டு, கொள்ளை, வழிப்பறி மற்றும் மிரட்டல் போன்ற குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்ததால் பணகுடி காவல் ஆய்வாளர், ராஜாராம் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விடுத்த வேண்டுகோள் படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.வி. பிரசண்ண குமார், இ.கா.ப., பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், மூவரும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளை மத்திய சிறையில் (12.02.2026) அன்று அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















