திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரம், பேட்டை பகுதியில் கஞ்சா போதை பொருள் விற்பனை வழக்கில் சம்மந்தப்பட்டு எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த திருநெல்வேலி, பேட்டை, மைலப்பபுரம், வெள்ளப்பாண்டி மகன் மணி(36). என்பவர் மீது மாநகர காவல் துணை ஆணையர், V.கீதா, (மேற்கு) காவல் உதவி ஆணையர், செந்தில்குமார்,(டவுன் சரகம்) பேட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர், ஜூடி ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., ஆணைப்படி (11.09.2024)-ஆம் தேதி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்