நீலகிரி : நீலகிரி மாவட்டம், கூடலூர் உட்கோட்டம், கூடலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக குட்கா பொருட்கள் பதுக்கி வைப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி கூடலூர் தனிப்படை காவலர்கள், தேவராஜ் என்பவரிடம் 152 பாக்கெட் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தும் குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.