கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக குட்கா கடத்தி வந்த காரை தடுத்து நிறுத்த முயன்ற போது தலைமை காவலர் மீது மோதி காரின் முன் பக்க பேனட்டில் வைத்து இழுத்துச் சென்ற குற்றவாளியை கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இவ்வழக்கின் எதிரி மேலும் பல குற்ற செயல்களில் ஈடுபடலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தங்கதுரை இ.கா.ப. அவர்களின் பரிந்துரையின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திரு. தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்களிடம் உத்தரவு பெற்று சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.



















