காஞ்சி: காஞ்சி தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமங்களின் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.திரு.M.சுதாகர் அவர்கள் தலைமையில் சட்டம் (ம) ஒழுங்கு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கிராமங்களில் சட்ட விரோத செயல்களில் ஈடுபவர்கள் பற்றிய தகவலை காவல்துறைக்கு பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும் எனவும், தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
கிராமங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதால் குற்றங்கள் குறைவதோடு, குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காண முடியும் எனவே, அனைத்து கிராமங்களிலும் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமரா பொறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நாகேஷ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.