நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு,A.K. அருண் கபிலன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக வேட்டைக்காரணிருப்பு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கஞ்சா கடத்தியவர்களை கைது செய்து சிறப்பாக செயல்பட்ட நாகை மாவட்ட காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ், மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டினார்கள்.




















