திருநெல்வேலி: திருநெல்வேலி மேலப்பாளையம் குறிச்சி வாய்க்கால் பாலம் பகுதியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், காளியப்பன் தலைமையிலான காவல்துறையினர் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த மேலப்பாளையம், குறிச்சியைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் முத்துராம்(19). வெங்கடாசலம் மகன் பாலசுப்பிரமணியன்(19). ஆண்டவர் 1ஆவது தெருவைச் சேர்ந்த லட்சுமணன் மகன் மாலை(19). உள்ளிட்டோரை மறித்து சோதனை நடத்த முயன்றபோது அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் காவல் உதவி ஆய்வாளரை தாக்க முயன்றதுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இது குறித்து மேலப்பாளையம் காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















