மதுரை : சாலை விபத்துக்களை தடுக்கவும் அதிகமான வாகன ஓட்டங்களை கண்காணிக்கவும் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பு முறையை உறுதி செய்வதற்கும் சிந்தாமணி சாலை – ரிங்ரோட்டின் சந்திப்பில் நேற்று 28.8.2020 ம்தேதி 17.30 மணியளவில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி போக்குவரத்து சிக்னலை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., அவர்கள் திறந்து வைத்தார். பாதுகாப்பான முறையில் மேற்கண்ட சந்திப்பைக் கடப்பதற்கு பாதசாரிகளுக்கு வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் கூடுதலாக PUBLIC ANNOUNCEMENT SYSTEM பொருத்தப்பட்ட 7 புதிய கேமராக்களும் காவல் ஆணையர் அவர்களால் திறக்கப்பட்டுள்ளன. அந்த கேமராக்கள் 360 டிகிரி திசைகளில் சுழன்று சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் வாகனங்களையும் கண்காணிக்கும். மதுரை மாநகரில் உள்ள அனைத்து முக்கிய போக்குவரத்து சந்திப்புகளிலும் பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழில்முனைவோரின் முழு ஒத்துழைப்புடன் இந்த முயற்சி மேலும் தொடரப்படவும் உள்ளது.