திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., தலைமையில் (25.01.2025) அன்று, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், காவல் துணை ஆணையர்கள் V.கீதா,(மேற்கு) V.வினோத் சாந்தாராம்,(கிழக்கு) மற்றும் அமைச்சு பணியாளர்கள், காவல் ஆளிநர்கள், ஒன்றிணைந்து, மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்தியக்குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், ஜாதி, வகுப்பு, மொழி, ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்