திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர், உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இன்று (18.12.2024) நடைபெற்ற இம்முகாமில் 13 பேர் கலந்து கொண்டு திருநெல்வேலி காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப.,விடம் புகார் மனுக்களை அளித்தார்கள். புகார் மனுக்கள் மீது உரிய தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும் என காவல் ஆணையர் கூறினார். இம்முகாமில் காவல் துணை ஆணையர்கள் V.கீதா,(மேற்கு) G.S.அனிதா,(தலைமையிடம்) S.விஜயகுமார், (கிழக்கு) கலந்து கொண்டார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்