திருநெல்வேலி: தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. (20.11.2024) அன்று நடைபெற்ற இம்முகாமில் 12 பேர் காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப.,விடம் புகார் மனுக்கள் அளித்தனர். இதையடுத்து பொதுமக்களிடம் புகார் மனுக்கள் மீது, சரியான நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீர்வு கிடைக்க வழிவகை செய்யப்படும் என காவல் ஆணையர் உறுதியளித்தார். இம்முகாமில் காவல் துணை ஆணையர்கள் V.கீதா, (மேற்கு) S.விஜயகுமார், (கிழக்கு) ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்