திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில், உள்ள காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாத 266 வாகனங்களில் இரு சக்கர வாகனங்கள் 251 மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் 15 காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டு பிரிவு 102 கு.வி.மு.ச படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி வாகனங்கள் அனைத்தும் திருநெல்வேலி மாவட்ட அரசிதழில் (18.05.2022), -ம் தேதி வெளியிடப்பட்டு அரசுக்கு ஆதாயம் செய்யும் பொருட்டு திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல் நிலையம் மற்றும் தாழையூத்து காவல் நிலையத்தில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தாழையூத்து காவல்நிலைய வளாகத்தில் வைத்து (14.11.2022) ,மற்றும் (15.11.2022), ஆகிய தேதிகளில் பொது ஏலம் நடத்தி விற்பனை செய்யப்படும். அதனால் முன்பணமாக 1000 ஐ திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்தில் (12.11.2022),- ம் தேதி கட்டி டோக்கன் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. வாகனங்களை முன்கூட்டியே பார்வையிடலாம்.